சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேர தகவல் மையங்கள்!
சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் இருந்து கோயிலுக்குச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. நவம்பர் 17, 2025 முதல் ஜனவரி 20, 2026 வரை நடைபெறும் யாத்திரை சீசனுக்கு மாற்றாக, பக்தர்களின் பயணம் சிரமமின்றி நடைபெற, மாநிலம் முழுவதும் தேவையான உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்து சமய அறநிலைய துறை சார்பில் சென்னை, கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் பம்பை உள்ளிட்ட மூன்று முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தரிசனம், தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி உதவி வழங்கும் வகையில், இலவச தொலைபேசி எண் 1800 425 1757 உட்பட பல பிரத்யேக மொபைல் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் யாத்திரை முழுவதும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் பயணிக்க இந்த மையங்கள் பெரும் ஆதரவாக இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஜனவரி 20 வரை செயல்படும் இந்த முயற்சிகள், சபரிமலைக்கு புறப்படும் பக்தர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!