ரயில்களில் சபரிமலை பக்தர்களுக்கு கற்பூரம் ஏற்றத் தடை... ! 

 
 

ரயில்வே பாதுகாப்பு விதிகளின்படி, ரயில் பெட்டிகள், நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், சுரங்கப் பாதைகள், நடை மேம்பாலங்கள் உள்ளிட்ட ரயில் நிலைய வளாகத்தின் எந்தப் பகுதியிலும் கற்பூரம், மெழுகுவர்த்தி, விளக்குகள் போன்றவற்றை ஏற்றுவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த விதியை மீறுபவர்களுக்கு ரெயில்வே சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு ரயில் மூலம் பயணம் செய்யும் பக்தர்கள், ரயில் பெட்டிகளுக்குள் அல்லது நிலைய வளாகத்திற்குள் கற்பூரம் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என ரயில்வே கேட்டுக்கொள்கிறது. பயணிகள் பாதுகாப்பும், தீ விபத்து தடுப்பும் கருத்தில் கொண்டு இந்தத் தடை கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. ரயில் பெட்டிகளுக்குள் ஒரு சிறிய தீப்பொறியே கூட பெரும் விபத்திற்கும் உயிர்ப்பாதிப்புக்கும் வழிவகுக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சபரிமலை செல்லும் பக்தர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை கோட்டம் சார்பில் பிரச்சாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரயில் நிலைய வளாகங்களில் அறிவிப்புகள் ஒலிபரப்பப்படுகின்றன. மேலும், தடையை மீறி கற்பூரம் ஏற்றுவதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை குழுக்கள் ரயில்களிலும், நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!