சபரிமலை தங்கக் கவச மோசடி... நடிகர் ஜெயராம் பரபரப்பு வாக்குமூலம் !
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில், கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களில் 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றிக்குச் சொந்தமான பெங்களூரு இடங்கள், திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் முன்னாள் தலைவர் பத்மகுமாருக்குச் சொந்தமான கேரள இடங்கள் மற்றும் நகை வியாபாரிகளின் அலுவலகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
2019 முதல் 2025 வரை கோயிலில் இருந்த தங்கப் புனிதப் பொருள்கள் ‘செப்புத் தகடுகள்’ என பதிவேடுகளில் தவறாக பதிவு செய்யப்பட்டு சட்டவிரோதமாக அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவை சென்னை மற்றும் கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, ரசாயன முறையில் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கோயில் காணிக்கைகள் மற்றும் சடங்குகள் தொடர்பான நிதியிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதையடுத்து தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றி, தேவஸ்வம் வாரியம் முன்னாள் தலைவர்கள் இருவர் மற்றும் கோயில் தந்திரி கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக நடிகர் ஜெயராமின் வீட்டில் தங்கத் தகடுகள் இருந்த புகைப்படங்கள் வெளியான நிலையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் எஸ்ஐடி அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். உண்ணிகிருஷ்ணனுக்கும் நடிகர் ஜெயராமுக்கும் இடையேயான தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!