சபரிமலையில் 16 நாளில் 13 லட்சம் பக்தர்கள் தரிசனம்... ! 

 
 

சபரிமலை ஐயப்பன் கோயில் இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கிய நிலையில், தினமும் நிர்ணயிக்கப்பட்ட 90 ஆயிரம் பக்தர்கள் எண்ணிக்கையை விட அதிகமானோர் கட்டுப்பாடின்றி குவிந்து வருகின்றனர்.

ஆன்லைனில் முன்பதிவு செய்த 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவில் 5 ஆயிரம் பக்தர்களுக்கும் மட்டுமே தினசரி அனுமதி வழங்கப்படுகின்றது. ஆனால் முன்பதிவு செய்தவர்களும் வருவதால் தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர். சில நாட்களில் இதன் அளவு 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது.

இன்று காலை வரை தரிசனம் செய்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று மற்றும் நேற்று முன்தினம், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை சற்று குறைந்திருந்தது. ஆனால் இன்று முதல் பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்து, அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது பக்தர்கள் வரிசை மரக்கூட்டம் வரை காணப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!