undefined

 சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது! 29 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

 
 


பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காகக் கடந்த மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17 முதல் தொடர்ந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி 10-ஆம் தேதி வரையான தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. மேலும், உடனடி தரிசன முன்பதிவு மூலம் தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நடப்பு சீசனில் மண்டல பூஜை வரும் 27-ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் ஜனவரி 14-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறித்த ஒரு மகிழ்ச்சியான தகவலைத் திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இதுவரை நடை திறக்கப்பட்ட 29 நாட்களில் 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி ஐயப்பனைத் தரிசனம் செய்துள்ளனர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்த 25 லட்சம் பக்தர்களில், எருமேலி, அழுதக்கடவு காட்டுப் பாதை வழியாக 37,059 பக்தர்களும், வண்டிப்பெரியார், சத்ரம் புல்மேடு வழியாக 64,776 பக்தர்களும் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர். தற்போது சபரிமலை தரிசனத்திற்குத் தினசரி சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் 24-ஆம் தேதி 1,00,867 பேரும், கடந்த 8-ஆம் தேதி 1,01,844 பேரும் ஒரே நாளில் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!