மகர ஜோதி முன்னிட்டு பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரண ஊர்வலம்!
சபரிமலையில் மகர ஜோதி விழா நாளை நடைபெற உள்ள நிலையில், ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான திருஆபரணங்கள் பந்தள அரண்மனையில் இருந்து நேற்று ஊர்வலமாக புறப்பட்டன. மகர ஜோதி விழாவுக்காக கடந்த மாதம் 30-ந் தேதி நடை திறக்கப்பட்டு தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருஆபரணங்கள் பந்தளம் வலியகோயில் ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
மகர ஜோதியை முன்னிட்டு நேற்று திருஆபரணங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பாரம்பரிய வழக்கப்படி ஊர்வலம் தொடங்கியது. பல கோயில்களை கடந்து பாரம்பரிய பாதையில் செல்லும் இந்த ஊர்வலம், நாளை மாலை சரங்குத்தி சென்றடையும். அங்கு தேவசம்போர்டு அதிகாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படும். திருஆபரண ஊர்வலம் சென்ற பின்னரே நிலக்கல், பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படும்.
நாளை மாலை 6.25 மணிக்கு ஐயப்பனுக்கு திருஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். மகர ஜோதியை தரிசிக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பக்தர்கள் நிற்க வேண்டும் என்றும், பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!