undefined

சபரிமலை   நகை கொள்ளை… தமிழகத்தில் 21 இடங்களில்  அமலாக்கத்துறை அதிரடி சோதனை! 

 

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க நகை திருட்டு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் இன்று ஒரே நேரத்தில் 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனை நடத்தப்படுகிறது.

சபரிமலை கோயில் மேற்கூரை, கருவறை கதவுகள், துவாரபாலகர் சிலைகள் ஆகியவை 1998-ம் ஆண்டு தங்கத் தகடுகளால் வேயப்பட்டன. பழுது பார்ப்பதற்காக 2019-ம் ஆண்டு தகடுகள் பிரித்து சென்னைக்கு அனுப்பப்பட்டன. அந்தப் பணியை உன்னிகிருஷ்ணன் போத்தி மேற்கொண்டார். அப்போது தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது வெளியே தெரியவில்லை. கடந்த ஆண்டு மீண்டும் பழுதுபார்ப்பு நடந்தபோது எடை பார்த்ததில் சுமார் 4 கிலோ தங்கம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சபரிமலை தங்க கொள்ளை விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போத்தி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவசம் போர்டு அதிகாரிகள், முன்னாள் தலைவர்கள், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள நகை தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள் என பலரும் கைது பட்டியலில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து பணம் எங்கு சென்றது என்ற சந்தேகத்தில் அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை நகை நிறுவனம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!