சபரிமலை தங்கம் விவகாரம்... எதிர்க்கட்சி அமளியில் கேரள சட்டமன்றம் ஒத்திவைப்பு!

 
 

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு விசாரணையில் அரசு சுணக்கம் காட்டுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கேரள சட்டமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரத்தை அவையில் எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அமளி தீவிரமடைந்த நிலையில், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தை முன்வைத்து சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை நோக்கி ஏற முயன்றனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானது.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கடும் அமளியை அடுத்து சபாநாயகர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து சட்டமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் கேரள அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!