சபரிமலை தங்கம் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்… ரூ.2 கோடி முதலீடு மர்மம்… நிதி நிறுவனம் திடீர் மூடல்..!
சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் தந்திரி கண்டரரு ராஜீவரு குறித்து புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் அவர் ரூ.2 கோடி தொகையை திருவல்லாவில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது நஷ்டம் காரணமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வழக்கில் புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த நிதி நிறுவனத்திலும், அதை நடத்தி வந்த என்.எம்.ராஜு வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர். நிதி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து போலீசார் மோசடி வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தந்திரி முதலீடு செய்ததாக கூறப்படும் ரூ.2 கோடி தொடர்பாக இதுவரை தனிப்பட்ட புகார் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு பல கோணங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. பண பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான தகவல்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!