சபரிமலையில் கொடியேற்றத்துடன்  பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்!   

 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா இன்று (மார்ச் 23, 2026) கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 5 மணிக்குத் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில், மேல்சாந்தி கோவில் நடையைத் திறந்து வைத்தார். இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றன. காலை 11:30 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் தந்திரியால் திருவிழாக் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் "சுவாமியே சரணம் ஐயப்பா" என விண்ணதிர முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை 10 நாட்களுக்குச் சபரிமலை சன்னிதானத்தில் திருவிழா கோலாகலம் நிலவும். நாள்தோறும் உச்சிக்கால பூஜைக்குப் பிறகு 'உற்சவ பலி'யும், இரவு பூஜைக்குப் பிறகு 'ஸ்ரீபூதபலி'யும் நடைபெறும். இந்த 2  பூஜைகளும் திருவிழா நாட்களின் மிக முக்கியமான வைபவங்களாகக் கருதப்படுகிறது. திருவிழாவின் 9-ஆம் நாளான மார்ச் 31ம் தேதி இரவு, சரங்குத்திப் பகுதியில் 'பள்ளிவேட்டை' நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமி விக்ரகம் சன்னிதானத்திற்குத் திரும்பும் நிகழ்வு பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 'ஆறாட்டு' ஏப்ரல் 1ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று காலை 9 மணிக்கு யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்கப் பம்பை ஆற்றுக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். அங்குள்ள பம்பை குளத்தில் ஐயப்பனுக்குப் புனித நீராட்டு எனும் 'ஆறாட்டு' நடைபெறும். அதன் பிறகு மாலையில் சன்னிதானத்தில் திருவிழாக் கொடி இறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். போர்ச் சூழல் மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் பக்தர்கள் வருகையில் மாற்றம் இருக்குமா என்ற அச்சம் நிலவினாலும், ஐயப்பனின் அருளைப் பெறப் பக்தர்கள் கூட்டம் இப்போதே சபரிமலையில் அலைமோதத் தொடங்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!