சதுரகிரி மலைப்பாதையில் சோகம்… சென்னையை சேர்ந்த பக்தர் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு! 

 
 

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜா (62) தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். சென்னையை சேர்ந்த நண்பர்கள் 38 பேருடன் இணைந்து, மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய அவர் வந்திருந்தார்.

நேற்று காலை தாணிப்பாறை அடிவாரம் வழியாக அனைவரும் சதுரகிரி மலைக்கோயிலுக்கு மலையேறி சென்றனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இரட்டை லிங்கம் அருகே சென்றபோது, ராஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக சக பக்தர்கள் உதவி செய்தபோதும், அவர் உயிரிழந்ததாக தெரியவந்தது. இந்த சம்பவம் உடன் வந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!