undefined

 கண்ணீருடன் விடை பெற்றார் சாய்னா நேவால்  … ரசிகர்கள் அதிர்ச்சி !  

 

இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையும், முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனையுமான சாய்னா நேவால் அனைத்து விதமான பேட்மிண்டன் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அவர், தற்போது தனது ஓய்வை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளார். விருப்பத்துடன் களத்தில் நுழைந்தது போலவே, விருப்பத்துடனே வெளியேறியதாக சாய்னா தெரிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து பேசிய அவர், முழங்கால் மூட்டு வலி தொடர்ந்து தொந்தரவு அளித்து வருவதாக கூறினார். ஒரு மணி நேரம் பயிற்சி செய்தாலே காலில் வீக்கம் ஏற்படுவதாகவும், இனி உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் விளக்கினார். உலகின் சிறந்த வீரராக தொடர தினமும் 8 முதல் 9 மணி நேரம் பயிற்சி தேவைப்படுவதாக கூறிய அவர், தற்போது அது சாத்தியமில்லை என மனம்விட்டு பேசினார்.

2012 லண்டன், 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, 2018 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். 2023-ல் சிங்கப்பூர் ஓபனில் கடைசியாக விளையாடினார். 35 வயதான சாய்னா நேவால், அர்ஜுனா விருது, ராஜீவ் கேல் ரத்னா, பத்மஸ்ரீ உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!