தமிழக கிராம ஊராட்சி தூய்மைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு!
தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் மாத ஊதியத்தை ரூ.5,000-லிருந்து ரூ.6,000-ஆக உயர்த்தும் அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.476.136 கோடியை மாநில நிதி ஆணையத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதி கிராம ஊராட்சிகள், பஞ்சாயத்து ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு விகிதாசாரமாக பகிரப்பட்டு, ஒவ்வொரு மாதமும் ரூ.39.678 கோடி ஊதியமாக செலவிடப்படும். ஊராட்சிகளின் வீடுகளின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கேற்ப, தூய்மைக் காவலர்களை மறுஒதுக்கீடு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு 2026 பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வந்து, தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தூய்மைக் காவலர்கள் பயனடைவார்கள். வீடு வீடாக குப்பைகளைச் சேகரித்து, தரம் பிரித்து, சுகாதாரத்தை பேணும் பணியை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!