undefined

தமிழகத்தில் போலி மருந்து விற்பனைக்கு முற்றுப்புள்ளி... இனி மருந்தகங்களில் QR கோட் வசதி - தமிழக அரசு அதிரடி!

 

தமிழ்நாட்டில் போலி மருந்துகள் புழக்கத்தைத் தடுக்கவும், மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து பொதுமக்கள் எளிதாகப் புகார் அளிக்கவும், அனைத்து மருந்தகங்களிலும் QR கோட் (QR Code) வசதியைக் கட்டாயம் அமல்படுத்த தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

சமீபகாலமாக போலி இருமல் மருந்துகள் மற்றும் பிரபல நிறுவனங்களின் பெயரில் விற்கப்படும் போலி மருந்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்தியப் பிரதேசத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதுச்சேரியில் பிரபல நிறுவனப் பெயரில் போலி மருந்துகள் விற்கப்பட்ட விவகாரத்தில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சூழலில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தமிழக அரசு இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் ஒரு புதிய செயலியை (App) உருவாக்கியுள்ளது. இதனுடன் இணைக்கப்பட்ட பிரத்யேக QR கோட் ஸ்டிக்கர்கள் இனி தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் ஒட்டப்பட வேண்டும். மருந்தகங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் பொதுமக்கள் கீழ்க்கண்ட புகார்களைப் பதிவு செய்யலாம்: வாங்கிய மருந்து போலியானது எனத் தெரிந்தால் உடனே புகார் அளிக்கலாம்.

மருந்துகளை உட்கொண்ட பிறகு உடலில் ஏதேனும் ஒவ்வாமை அல்லது எதிர்வினைகள் (Adverse reactions) ஏற்பட்டால் அதனைத் தெரிவிக்கலாம். ஏற்கனவே அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் அதுகுறித்தும் தகவல் தெரிவிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து கடை உரிமையாளர்களும், இந்த QR கோட் அடங்கிய ஸ்டிக்கரை வாடிக்கையாளர்களின் கண்ணில் படும்படி ஒட்ட வேண்டும் என மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடைமுறை மூலம் போலி மருந்து விற்பனையாளர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மருந்து நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!