சேலம் திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு!
தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இந்த மழை மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரில் தொடர் கனமழை காரணமாக விமான நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்து, ரயில், விமான போக்குவரத்து முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பேருந்து போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
இந்நிலையில், இம்மாதம் டிசம்பர் 24ம் தேதியன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாகவும், இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த டிசம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, திமுக இளைஞரணி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தென்மாவட்டங்களில் கனமழை பெய்து, பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்து கஷ்டப்படும் போது, அமைச்சர்களும், உதயநிதியும் சேலத்தில் மாநாட்டு வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், இந்த மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வெள்ளம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக டிச. 24-ம் தேதிக்கு மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய நான்கு தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திமுக இளைஞர் அணி மாநாடு மீண்டும் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை தொடர் மழை பெய்ததால் மழை வெள்ளம் ஏற்பட்டது. மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!