சாமி ... உங்களால் இந்தியாவுக்கே பெருமை... ரஜினிகாந்த் இளையராஜாவுக்கு வாழ்த்து !
சர்வதேச மகளிர் தினமான இன்று மார்ச் 8ம் தேதி சனிக்கிழமை இசைஞானி இளையராஜா, ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் லண்டனில் தான் உருவாக்கிய முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றம் செய்கிறார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இவர்களுடன் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.
இளையராஜா லண்டன் புறப்படுவதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பேசியபோது, “இன்க்ரிடபிள் இந்தியாவைப் போல் இது இன்க்ரிடபிள் இளையராஜா” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா மற்றும் ரஜினியும் ஒரு மேடையில் சாமி, சாமி என்று ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அன்போடு நகைச்சுவையாக அழைத்துப் பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!