சமோசாவில் பூரான்... ஸ்னாக்ஸ் பிரியர்களே உஷார்...!
நொறுக்குத்தீனி பிரியர்கள் டீக்கடைக்கு சென்றால் முதலில் கேட்பது சமோசாதான் என்ற அளவுக்கு, காலை மற்றும் மாலை நேரங்களில் அது தனி இடத்தைப் பெற்றுள்ளது. ரோட்டுக்கடை முதல் பேக்கரி வரை, எல்லா இடங்களிலும் சமோசா விற்பனை சூடுபிடித்து வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் சமோசா வாங்கிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரக்காணம் பழைய பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பேக்கரியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அந்தப் பேக்கரியில் ராஜசேகர் என்பவர் சம்பவத்தன்று சமோசா வாங்கியுள்ளார். பின்னர் அதை சாப்பிட முயன்றபோது, சமோசாவின் உள்ளே பூரான் ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து கடை உரிமையாளரிடம் சென்று புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் உரிய விளக்கம் அல்லது நடவடிக்கை எடுக்கப்படாததால், உணவில் பூரான் இருந்ததை வீடியோவாக பதிவு செய்து, ஆதாரத்துடன் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமோசா உள்ளிட்ட எந்த உணவாக இருந்தாலும், வெளியிடங்களில் வாங்கி உண்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!