undefined

 ‘அம்மாவின் ஆசியுடன்  அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவோம்”’ ...  சசிகலா சூளுரை!  

 
 

முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் ஒன்பதாவது நினைவு நாளையொட்டி, சென்னை மெரீனா நினைவிடத்தில் வி.கே. சசிகலா இன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கண்ணீருடன் நின்று வணங்கிய அவர், ஜெயலலிதாவின் உருவப் படத்தின் முன், “அம்மாவின் ஆசியுடன் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவோம்” என்ற உறுதியை எடுத்தார். அவருடன் டிடிவி தினகரன், குடும்பத்தினர் மற்றும் பெருமளவு அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

பின்னர் ஊடகங்களை சந்தித்த சசிகலா, “தொண்டர்களின் ஒற்றுமை எனக்கு பெரிய பலம். இந்த ஒற்றுமை நீடித்தால், அம்மா அமைத்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது உறுதி” என உறுதியளித்தார். அதிமுகவை மீண்டும் எழுப்பி, ஜெயலலிதாவின் கொள்கைகளை நிலைநாட்டுவதே தனது ஒரே குறிக்கோள் எனவும்   கூறினார்.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனைப் பற்றி கேட்கப்பட்டபோது, “ஒருவர்மீது கோபத்தில் அவசரமான முடிவுகள் எடுக்கக் கூடாது. மக்களுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆர், அம்மா உருவாக்கிய இயக்கத்தை விட்டு செல்லும் முடிவை பற்றி… என்ன சொல்வதே தெரியவில்லை” என கூறி, மறைமுகமாகவே அவரது முடிவை விமர்சித்தார். மேலும், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கார்த்திகை தீப விவகாரத்தில் திமுக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூட மதிக்காமல் அரசியல் செய்கிறது என குற்றம்சாட்டினார். ஜெயலலிதா நினைவு நாளில் சசிகலாவின் இந்த பேச்சு, அதிமுக ஒற்றுமை விவாதத்திற்கு புதிய ஊக்கத்தை அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!