காங்கிரஸில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன்... சசிதரூர் உறுதி!
கேரள தலைநகர் திருவனந்தபுரம் காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கலந்து கொண்டு நினைவுரை வழங்கினார்.
சசி தரூர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது, “நான் தொடர்ந்து காங்கிரஸில் இருக்கிறேன், வேறு எங்கும் செல்ல மாட்டேன். காங்கிரஸில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன். என் கருத்துகள் பாஜகவுக்கு ஆதரவானவை அல்ல; நமது தேசத்துக்கு ஆதரவானவை. சில விவகாரங்களில் என் கருத்துகள் மாறுபட்டதாக இருக்கலாம். ராகுல் காந்தி மதவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணர்வுக்கு எதிராக குரல் எழுப்புகிறார். நான் தனியாகவும் மதவாதத்தை தீவிரமாக எதிர்க்கிறேன்” என்று கூறினார்.
இதுதொடர்பாக கேரள காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சதீசன் கூறியதாவது, “கேரள காங்கிரஸ் தலைவர்களில் கருத்து வேறுபாடு இல்லை. நாம் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறோம். வரும் தேர்தலில் 140 தொகுதிகளிலும் சசி தரூர் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கிறார்” என தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!