பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது... மிரட்டல் வழக்கில் அதிரடி நடவடிக்கை!
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது யூடியூப் பக்கத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்தார். படத் தயாரிப்பாளரை மிரட்டியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் அவரைக் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆதம்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டிற்குப் போலீசார் சென்றனர். அவரை வீட்டிலேயே வைத்து அவர்கள் கைது செய்தனர்.
இந்தக் கைது குறித்து சவுக்கு சங்கர் தரப்பில் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர ஆணையர் அருண் குறித்த தகவலை அவர் வெளியிட்டார். ஆணையர் அருண் பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டார். அதனால்தான் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இந்தக் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!