ரூ30,000 கமிஷன்... ஆணா... பெண்ணா?"... வீட்டில் வைத்து ரகசிய 'ஸ்கேன்... அதிர வைக்கும் தகவல்கள்! 

 


சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாகக் கண்டறிந்து சொல்லி வந்த ஒரு கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஜெயசூர்யா என்பவரது வீட்டில், முறையான அனுமதியின்றி ரகசியமாக ஸ்கேன் மெஷினை வைத்துக்கொண்டு கர்ப்பிணிகளுக்குப் பாலினப் பரிசோதனை நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் போலீசார் இந்த 'ரெய்டு' நடவடிக்கையை மேற்கொண்டனர்.

போலீசார் வீட்டிற்குள் நுழைந்தபோது, இரண்டு கர்ப்பிணிகளுக்குப் பாலினப் பரிசோதனை செய்துகொண்டிருந்த நர்சு அம்சவேணி, இடைத்தரகர் குணவதி மற்றும் வீட்டை வாடகைக்கு விட்ட ஜெயசூர்யா ஆகிய மூவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். ஒரு கர்ப்பிணிக்குச் சோதனை செய்ய 30,000 ரூபாய் வசூலிப்பதும், அதில் புரோக்கர் கமிஷனாக 3,000 ரூபாய் கைமாறுவதும் விசாரணையில் அம்பலமானது. இவர்கள் பயன்படுத்திய நவீன ஸ்கேன் மெஷின் மற்றும் ரொக்கப் பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் பெண் சிசுக்கொலையைத் தடுக்கக் கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது கடும் குற்றமாகக் கருதப்படும் நிலையில், பண ஆசைக்காகச் செவிலியரே இது போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான மூவர் மீதும் பிசிபிஎன்டிடி (PCPNDT) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இந்த கும்பலின் மற்ற கூட்டாளிகளையும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!