அதிர்ச்சி... மாதவிலக்கு நேரத்தில் மாணவியை வகுப்பறைக்கு வெளியே வைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம்!
Apr 10, 2025, 13:07 IST
தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி ஏப்ரல் 5ம் தேதி பூப்பெய்தியுள்ளார். இந்நிலையில் மாணவியின் 7ம் தேதி ஆண்டின் இறுதி தேர்வை எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார்.
அப்போது வகுப்பறையின் கதவை பூட்டிவிட்டு வெளியே அமர வைத்து அந்த மாணவியை தேர்வு எழுத வைத்தனர். இதனை அந்த மாணவியின் தாய் செல்போனில் வீடியோவாக எடுத்த நிலையில் இணையதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்த இன்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு அவர் இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தவறு நடந்து இருப்பது தெரிய வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கொடுத்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!