நாகப்பட்டினத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது... கலெக்டர் அதிரடி!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை தாக்கம் குறைந்துள்ளதால் இன்று (நவ. 18) பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அறிவித்துள்ளார். இலங்கை கடலோரத்துக்கு அப்பாலுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு காரணமாக நேற்று அதிகாலை முதல் நாகை, நாகூர், திருமருகல், வேளூர், வேதாரன்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
தொடர் கனமழையால் முன்னெச்சரிக்கையாக நேற்று மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், மழை குறைந்துள்ளதால் இன்று பள்ளி, கல்லூரிகள் இயல்புநிலைக்கு திரும்பும் என ஆட்சியர் தெளிவுபடுத்தினார்.
இதே நேரத்தில், தொடரும் மழை தாக்கத்தை முன்னிட்டு விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை தொடர்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!