நாளை சென்னைக்கு ரெட் அலெர்ட்... பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனுடன் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் மழை தீவிரமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் வரை சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் மட்டும் இருந்த நிலையில், தற்போது ரெட் அலர்டாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், தாழ்வான பகுதிகளில் நீர்த்தேக்கம் அதிகரிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வானிலை மையத்தின் தகவலை தொடர்ந்து கண்காணித்து வரும் நிர்வாகம், தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளையும், உதவி அணிகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது.
மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு, சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!