undefined

முகத்தை துணியால் மூடி அழுத்தி கணவன் கொலை செய்த பள்ளி ஆசிரியை!

 

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட் நகரில் கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாருதி காலனியைச் சேர்ந்த லக்ஷ்மன் நாயக் (38) என்பவரை, அவரது மனைவி பத்மா (30) மற்றும் அவரது காதலன் கோபி (40) சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. பத்மா பட்டுகாடிப்பள்ளிதாண்டா தொடக்கப்பள்ளி ஆசிரியை, கோபி தடூர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆவார்.

பத்மாவுக்கும் கோபிக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இதை அறிந்த லக்ஷ்மன் நாயக் மனைவியை கண்டித்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொல்ல பத்மா திட்டமிட்டு, கடந்த மாதம் 24-ம் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த லக்ஷ்மன் நாயக்கை முகத்தை துணியால் அழுத்தி மூச்சுத் திணறடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் கோபி அங்கிருந்து தப்பிச் சென்றார்.

மறுநாள் எதுவும் நடக்காதது போல பள்ளிக்குச் சென்ற பத்மா, நாடகமாக கதறி அழுது சந்தேகத்தை மறைக்க முயன்றார். ஆனால் லக்ஷ்மன் நாயக்கின் தம்பிக்கு சந்தேகம் எழுந்து போலீசில் புகார் அளித்தார். தீவிர விசாரணையில் பத்மா குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பத்மா மற்றும் கோபி இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!