undefined

 பள்ளி வேன், லாரி மீது மோதி   13 மாணவர்கள் உடல் நசுங்கி பலி... 11 பேர் படுகாயம்! 

 

தென் ஆப்பிரிக்காவின் கவுடங்க் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் வேன் இன்று காலை விபத்தில் சிக்கியது. மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் பள்ளி வேனில் பயணித்த 13 மாணவ, மாணவியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்ததும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!