undefined

இன்று 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் உத்தரவு!

 

இன்று, ஜனவரி 2ம் தேதி, தமிழகத்தில் பின்வரும் 2 மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று புகழ்பெற்ற மரகத நடராஜர் சிலையிலிருந்து சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும் நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடுவார்கள். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜனவரி 10, 2026 (சனிக்கிழமை) அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று இன்று கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழித் திருவிழாவின் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் ஜனவரி 10, 2026 (சனிக்கிழமை) அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறை அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும். இருப்பினும், அவசர காலப் பணிகளைக் கவனிக்கும் அரசு அலுவலகங்கள் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் இயங்கும். இந்த விடுமுறை 'செலாவணி முறிச்சட்டம் 1881'-ன் கீழ் அறிவிக்கப்படாததால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!