இன்று காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் உத்தரவு!
காரைக்காலின் புகழ்பெற்ற ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான மஸ்தான் சாஹிப் தர்கா (பெரிய பள்ளிவாசல்) கந்தூரி விழா இன்று நடைபெற உள்ள நிலையில், இன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாணவர்களின் நலன் கருதி ஒரு முக்கிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட செய்முறைத் தேர்வுகள் மற்றும் முன்பருவத் தேர்வுகள் இருந்தால், அவை எவ்வித மாற்றமுமின்றி திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் பிப்ரவரி 7, 2026 (சனிக்கிழமை) அன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழா என்பது மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக விளங்கும் ஒரு விழாவாகும். இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 'சந்தனக்கூடு' ஊர்வலம் நடைபெறும். ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மாவட்ட நிர்வாகம் பலப்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!