undefined

நாளை 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... 3 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை!

 

நாளை கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதைப் போலவே நாளை சென்னையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் திருவிழாவில் உள்ளூர்  மக்களும் கலந்து கொள்ள வசதியாக திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா நாளை டிசம்பர் 3ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நாளை காலையில் பரணி தீபமும், மாலையில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர இருப்பதால், பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் டிசம்பர் 13ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகச் செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதே போன்று நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு பேராலயத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்றைய தினம் அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் டிசம்பர் 6ம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!