undefined

நாளை சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... 3 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை!

 

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், தற்போது தமிழகம்-புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாகச் சென்னையில் இன்று காலை முதல் விட்டு விட்டுப் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சென்னையில் நாளை ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே கனமழை காரணமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகள் வழக்கம் போலச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே போன்று திருவண்ணாமலை மாவட்டத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!