விஞ்ஞானிகள் எச்சரிக்கை... அட்லாண்டிக் கடலில் வேகமாக படரும் பாசி - என்னென்ன ஆபத்து?!
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் ‘கிரேட் சர்காசம் பெல்ட்’ எனப்படும் பிரம்மாண்ட கடல்பாசிப் படலம் வேகமாக பரவி வருவது குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 5,500 மைல்கள் நீளத்திற்கு பரந்துள்ள இந்தப் பாசிப்படலம் விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பழுப்பு நிறப் பாம்பு போலத் தோன்றுகிறது. ஆப்பிரிக்கா கடற்கரையிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரை இது பரவி இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, கடந்த 2011ஆம் ஆண்டில்தான் இந்தப் பாசிப்படலத்தின் வளர்ச்சி முதன்முதலில் கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது இதன் அளவு மிக வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் மட்டும் சுமார் 3.75 கோடி மெட்ரிக் டன் கடல்பாசி கடலில் மிதப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் ஆறுகள் வழியாக கடலில் கலப்பதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக அமேசான் நதி வழியாக வரும் ஊட்டச்சத்துக்கள் பாசிகளின் வளர்ச்சியை வேகப்படுத்துகின்றன. இந்தப் பாசி கடற்கரையை அடைந்தபின் நச்சு வாயுக்கள் வெளியிட்டு மனித ஆரோக்கியத்துக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!