5 வது நாளாக சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தீவிர போராட்டம்!
சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தேர்தல் வாக்குறுதியான 311-ஆவது உறுதிமொழியை நிறைவேற்றக் கோரி எழும்பூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு அவர்கள் திரண்டு அமர்ந்தனர். ஊதிய முரண்பாடு உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டம் இரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக இரண்டு ஆசிரியர்கள் மயக்கமடைந்தனர். உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய ஆசிரியர்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர்.
போலீசார் போராட்டத்தை கலைக்க முயன்றாலும் ஆசிரியர்கள் உறுதியுடன் தொடர்ந்தனர். முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!