undefined

குடியரசு தினம் ஸ்பெஷல்... விமான நிலையங்களில் 7 அடுக்கு பாதுகாப்பு!  

 

நாடு முழுவதும் ஜன.26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் விமான, ரயில், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய கோயில்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை செய்யப்படுகின்றன. ஓடுபாதை, கார் பார்க்கிங், எரிபொருள் நிரப்பும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலையத்தின் முக்கிய இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ரோந்துப் பணியில் உள்ளனர். பாதுகாப்பு காரணமாக பயணிகள் முன்கூட்டியே விமான நிலையம் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜன.24 முதல் 26 வரை 7 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் என்றும், இந்த ஏற்பாடு ஜன.30 வரை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!