பார்றா... தங்கத்தை உருக்கி பணமாக அக்கெளண்ட்டில் டெபாசிட் செய்யும் ஏடிஎம் மிஷின்!
தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அசுர வேகத்துடன் வளர்ந்து வருகிறது. அதிலும் சீனாவை பொறுத்தவரை தொழில்நுட்பத்தின் முன்னோடி என்றே கூறலாம். மனிதர்கள் செய்யும் வேலைகளை இயந்திரங்கள் மூலம் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை யதார்த்தமாக மாற்றிய நாடுகளில் முதன்மையானது சீனா தான்.
அந்த வரிசையில் தற்போது சீனாவில் உள்ள சாங்காய் நகரில் கிங்ஹுட் குழு என்ற நிறுவனம் சார்பில், 30 நிமிடங்களில் தங்கத்தை பணமாக மாற்றும் ‘GOLD ATM’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தின் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இந்த ஏடிஎம் இயந்திரத்தில் தங்கத்தை வைத்ததும் முதலில் தங்கத்தின் எடை மற்றும் தூய்மையை நிகழ்நேரத்தில் மதிப்பீடு செய்கிறது. அதன் பிறகு சந்தை மதிப்பை தீர்மானிக்கிறது. பின்னர் அந்த தங்க உருக்கி மற்றும் அதனை பணமாக பயனரின் வங்கிக் கணக்கில் சில நிமிடங்களில் மின்னணு முறையில் டெபாசிட் செய்து விடுகிறது.
உலக அளவில் தங்கத்தின் விலைகள் சாதனை அளவைத் தொட்டிருக்கும் நேரத்தில், இந்தப் புதிய ஏடிஎம் இயந்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பாரம்பரியமாக, தங்கத்தை விற்பனை செய்வது என்பது நகைக் கடைக்குச் சென்று, அதன் தூய்மையைச் சோதித்துப் பார்த்து, பணம் செலுத்துவதற்காகக் காத்திருப்பது போன்ற நேரத்தை எடுத்துக் கொள்ளும்.
இருப்பினும், இந்தப் புதிய ஏடிஎம் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் நீக்கி, வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கத்தை உடனடியாக விற்று அடுத்த நிமிடமே நமது வங்கிக்கணக்கில் பணமாக டெபாசிட் செய்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!