undefined

இலவசம் மட்டும் தான் அரசியல் என்றாகிவிட்டது... சீமான் பளிச்! 

 

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை தாம்பரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழக அரசியல் களத்தில் நடக்கும் கூட்டணி மாற்றங்கள் கொள்கை அடிப்படையில் இல்லை என விமர்சித்தார். கூட்டணி அமைப்பவர்களுக்கு கொள்கை இல்லை, சீட்டுகள் மட்டுமே இலக்கு என்றார். எனக்கும் என் கொள்கைக்கும் யாருமே போட்டி இல்லை என்றும் அவர் கூறினார்.

மீனம்பாக்கத்தில் விமான நிலையம் அவசியம் என்றும், பரந்தூரில் புதிய விமான நிலையம் தேவையில்லை என்றும் சீமான் வலியுறுத்தினார். ஏற்கனவே உள்ள விமான நிலையத்தை மேம்படுத்தினால் போதும் என்றார். வெற்றியும் தோல்வியும் சமம் என்றவர், தோல்விக்கு பயப்படாதவன்தான் வீரன் என பேசினார். எங்களுக்கு தெரியாத மூன்றெழுத்து பயம், தெரிந்தது வீரம் மட்டுமே என்றும் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

வறுமை, அறியாமை, மறதி ஆகியவை அரசியல்வாதிகளுக்கு முதலீடாக மாறிவிட்டதாக சீமான் குற்றம்சாட்டினார். கட்சி மாறுபவர்களை மக்கள் கேள்வி கேட்பதில்லை என்றார். இலவச திட்டங்கள் நீடிக்குமா என கேள்வி எழுப்பினார். கல்வித் தரம் உயரும் என்ற உத்தரவாதம் உள்ளதா என்றும் சாடினார். இலவசம் மட்டும் அரசியல் ஆகிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!