undefined

மாநாட்டுக்கு சீமான் தாயார்  வெற்றிலை, பாக்குடன் வீடு வீடாக அழைப்பு!

 

திருச்சியில் பிப்.21-ம் தேதி நடைபெறும்  நாம் தமிழர் கட்சி மாநாட்டை முன்னிட்டு, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாயார் அன்னம்மாள் நேரடியாக களமிறங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூரில் அவர் வீடு, வீடாகச் சென்று வெற்றிலை, பாக்குடன் மக்களை மாநாட்டுக்கு அழைத்து வருகிறார். கிராமத்து பாணியில் பேசும் அவரது அழைப்பு அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.

`மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிமுகப்படுத்த உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் வழக்கம் போல தனித்து போட்டியிடும் நாதக, இந்த முறை அதிக வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் தீவிர முயற்சியில் உள்ளது. அதற்காக மாவட்டம் தோறும் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று மக்களை வரவழைத்து வருகின்றனர்.

“அனைவரும் கண்டிப்பாக வர வேண்டும், வாகன வசதி செய்துள்ளோம்” என்று அன்னம்மாள் நேரில் கூறி வருவது கட்சியினருக்கு உற்சாகம் அளித்துள்ளது. இதுவரை கட்சி நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடாத அவர், தற்போது களத்தில் இறங்கியது சொந்த ஊர் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டை வெற்றிகரமாக்க நாதக முழுவீச்சில் தயாராகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!