விஷம் வைத்து கொன்னு என்னைச் சுடுகாட்டில் போட்டுவிடு... சீமான் ஆவேசம்!
நாமக்கல்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாமக்கல் மாவட்டத்தில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், தமிழக அரசின் இலவசத் திட்டங்கள் மற்றும் மக்களின் வாக்குரிமை குறித்து மிகவும் ஆவேசமாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார். "ஒரு தனிமனிதன் கையேந்தினால் அது பிச்சை என்கிறோம்; ஆனால் ஒரு மாநிலமே சேர்ந்து கையேந்துவதை மட்டும் எப்படி இலவசம் என்று சொல்ல முடியும்?" என அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய சீமான், "மீண்டும் இதே ஆட்சிதான் வரவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், தாராளமாக அவர்களுக்கே வாக்களியுங்கள். என்னை அப்படியே தூக்கிச் சுடுகாட்டில் போட்டுவிடுங்கள். உங்கள் வீட்டிற்கு என்னை அழைத்து வந்து சோறு போடுகிறீர்கள் அல்லவா, அந்தச் சோற்றிலேயே விஷம் வைத்துவிடுங்கள். உங்களிடம் கத்திக் கத்தி சாகிறதை விட, அந்த விஷத்தைச் சாப்பிட்டு ஒரே அடியாகச் செத்துப் போகிறேன்" என உருக்கமாகப் பேசினார்.
சீமானின் இந்த உணர்ச்சிகரமான பேச்சு அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இலவசங்கள் என்பது மக்களை அடிமையாக்கும் செயல் என்றும், தற்சார்பு பொருளாதாரமே மாற்றத்தை உருவாக்கும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சீமானின் இந்த அதிரடிப் பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!