undefined

இந்திய விமானப்படை பயிற்சிப் பிரிவு புதிய தலைமைத் தளபதியாக சீதேபள்ளி ஸ்ரீனிவாஸ் பொறுப்பேற்பு!

 

பெங்களூருவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பொறுப்பேற்றுக் கொண்ட ஏர் மார்ஷல் சீதேபள்ளி ஸ்ரீனிவாஸ், அங்குள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து வீரமரணமடைந்த வீரர்களுக்குத் தனது முதல் மரியாதையைச் செலுத்தினார்.

இவர் MiG-21, கிரண், PC-7 Mk II உள்ளிட்ட பல்வேறு ரக விமானங்களில் 4,200 மணி நேரத்திற்கும் மேலாக பறந்த அனுபவம் கொண்டவர். இவர் ஒரு 'A வகை' தகுதி பெற்ற சிறந்த விமானப் பயிற்சியாளர் ஆவார்.

ஹெலிகாப்டர்களை இயக்குவது மட்டுமின்றி, 'பெச்சோரா' ஏவுகணை அமைப்பை இயக்குவதிலும் தகுதி பெற்றவர். தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், 1987-ம் ஆண்டு விமானப்படையில் இணைந்தார்.

இதற்கு முன்பு இவர் விமானப்படை அகாடமியின் கமாண்டன்ட் (Commandant) மற்றும் மேற்கு எல்லைப் பகுதியில் உள்ள முக்கியப் போர் விமானத் தளத்தின் கமாண்டிங் அதிகாரி எனப் பல உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.

இவரது அர்ப்பணிப்புடன் கூடிய சேவையைப் பாராட்டி இந்திய ஜனாதிபதி அவர்கள் 2017-ம் ஆண்டில் விஷிஷ்ட் சேவா பதக்கம் (VSM), 2024-ம் ஆண்டில் அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் (AVSM) ஆகியவற்றை வழங்கி கௌரவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!