undefined

 காமாலை இருந்தால் காண்பதெல்லாம் மஞ்சளாகத் தான் தெரியும்... சேகர் பாபு எடப்பாடி மீது கடும் தாக்கு! 

 
 

 

செங்கல்பட்டு, ஆலப்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சித் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். 10 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த நிலையம் ஒரே நேரத்தில் 53 பேருந்துகள் நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், நாளொன்றுக்கு 600 பேருந்துகள் வந்து செல்லும் வசதியும் உள்ளது.

பேருந்து நிலையத்தில் உணவகங்கள், ஏடிஎம் மையங்கள், டாக்ஸி புக்கிங் தளம், முதலுதவி மையம், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வறைகள் மற்றும் அருகில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் அழகிய குளமும் அமைக்கப்பட்டுள்ளது. அரசு தகவல் படி, இந்த புதிய நிலையம் ஜனவரி 30-ஆம் தேதி பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களை எளிதில் கிண்டலாக பதிலடி கொடுத்தார். “காமாலைக்கண் உள்ளவர்களுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். அங்க பாருங்க, இப்போது ஒரு மஞ்சள் நிறப் பேருந்து செல்கிறது, அதைப்போல்தான் அவருக்கு எல்லாம் தெரிகிறது” எனக் கூறி, கிண்டலாக பதில் அளித்தார். ஜனவரி 9-ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காமல் அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!