“எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது”... விஜய்யை சீண்டிய செல்லூர் ராஜூ!
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். தவெக அரசியலில் வெற்றி பெறாது என ஏளனமாக பேசிய அவர், “கடையை விரித்து வைத்துவிட்டு வியாபாரம் ஆகாமல் போகும். பரப்புரைக்கு நயன்தாரா வந்தாலும் கூட்டம் கூடும்” என்றார். நடிகருக்கு ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் அதுவே அரசியல் வெற்றிக்கு போதாது என்று கூறினார்.
“எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது” என்று கிண்டலடித்த செல்லூர் ராஜூ, அதிமுக களத்திலேயே இல்லை என சொல்வதற்கு விஜய்க்கு எந்த தைரியம் என கேள்வி எழுப்பினார். “நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்” என்றார். ரசிகர் கூட்டத்தை மட்டும் வைத்து அரசியல் நடத்த முடியாது என வலியுறுத்தினார்.
மேலும் 2026 தேர்தலை சுட்டிக்காட்டிய அவர், “எடப்பாடி பழனிசாமி முதல்வராகும் போது தவறு செய்யும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் சிறைக்கு செல்வார்கள்” என்று எச்சரித்தார். திமுக ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக மறைமுகமாக குற்றம்சாட்டினார். செல்லூர் ராஜூவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தல் களத்தில் விமர்சனங்கள் மேலும் தீவிரமாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!