undefined

“தப்பு தான்... மன்னிச்சுக்கோங்க...” - எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் செஃல்பி படத்துக்கு மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜூ!

 
 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஜெமினி, சாட் ஜிபிடி, மெட்டா ஏ.ஐ. என பல ஏ.ஐ. கருவிகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் செல்பி எடுத்தது போன்ற ஏ.ஐ. வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அதில், “இன்றைய அறிவியல் வளர்ச்சி என்னுடைய இதயதெய்வங்களோடு செல்பி எடுப்பது போல்” என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் கவனம் பெற்றது.

இந்த பதிவுக்கு கீழே ஒருவர், “ஏ.ஐ.-ல் விளையாடும் செல்லூரார், அண்ணாவை சந்திக்காதது நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு செல்லூர் ராஜு, “நண்பரே, மன்னிக்கவும்… தப்புதான்” என பதிலளித்தார். இந்த பதிலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!