undefined

தமிழகம் முழுவதும் விஜய் அலை....  2026-ல் தவெக வெற்றி உறுதி...  செங்கோட்டையன் நம்பிக்கை பேச்சு

 
 

தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்ற உடனே, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் ஆட்சியமைப்பார் என்றும், மக்களின் பேராதரவே அதன் அடிப்படையாக இருக்கும் என்றும் அவர் உறுதியாக கூறினார். “புதிய தலைமுறைக்கு புதிய ஆட்சி வேண்டும் என்ற கோரிக்கை இன்று தமிழகத்தில் எழுந்திருக்கிறது. அந்த மாற்றத்தின் மையமாக இருக்கும் சக்தி தவெக தான்” என அவர் தெரிவித்தார்.

விஜயின் தலைமைத் திறனையே அவர் தொடர்ந்து பாராட்டினார். “மக்கள் தாங்களே வரிசை கட்டி ஆதரவு தருகிறார்கள். விஜய் ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த அலை 2026-ல் புரட்சியாக வெடிக்கும்” என்று கூறிய அவர், அதிமுகவில் இருந்த அனுபவத்தை இங்கு பயன்படுத்தப் போவதாகவும் வலியுறுத்தினார். அதிமுகவிலிருந்து மேலும் யார் வரப்போகிறார்கள் என்ற கேள்வியை அவர் தவிர்த்தாலும், “மக்களின் மனதில் மாற்றம் துவங்கிவிட்டது. வருவோர் தாமாக வருவார்கள்” என சிரித்தபடி கூறினார்.

தவெக வளர்ச்சி குறித்து பேசிய செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தில் மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் கட்சிக்கு ஆதரவு அலை பெருகி வருவதாகவும், 2026-ல் வெற்றி உறுதி எனவும் நம்பிக்கை தெரிவித்தார். அவரது உறுதியான நிலைப்பாட்டும் விஜயை வெளிப்படையாக பாராட்டிய பேச்சும், தவெக கூட்டணியில் புதிய உற்சாகத்தை கிளப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!