undefined

விஜய் மக்களால் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார்.... செங்கோட்டையன் புகழாரம்!

 

தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். வீரமங்கை வேலு நாச்சியாரின் 296-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வரலாற்றுச் சொந்தக்காரர்களும் தேசியத் தலைவர்களுமே தங்களின் கொள்கைத் தலைவர்கள் என அவர் கூறினார்.

சத்தியமங்கலத்தில் நடைபெறும் வீரபாண்டி கட்டபொம்மன் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவித்தார். தவெக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், உலக நாடுகளில் தலைசிறந்த தலைவராக தவெக தலைவர் விஜய் இருப்பதாகவும் பேசினார். மக்களால் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார் என்றும், மாற்றத்திற்காக அயராது உழைக்கிறோம் என்றும் உற்சாகம் காட்டினார்.

கூட்டணி குறித்து பேசும்போது, விஜய்யுடன் நடப்பதுதான் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை என தெளிவுபடுத்தினார். விருப்புமனு குறித்து முடிவு தலைவர் விஜய்யிடமே உள்ளது என்றார். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் போராட்டங்கள் நடக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார். 2026 தேர்தலை நோக்கி தவெகவின் பிரச்சாரம் வேகம் பிடித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!