காங்கிரஸ் மூத்த தலைவர் அக்ஷய ஆச்சார்யா காலமானார்!
நீலகிரி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அக்ஷய ஆச்சார்யா (78) இன்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கஹாலியாவில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது மறைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்ஷய ஆச்சார்யா 1980 முதல் 1985 வரையும், 1995 முதல் 2000 வரையும் நீலகிரி தொகுதி எம்எல்ஏவாக பணியாற்றினார். மக்கள் பணியில் தீவிரமாக செயல்பட்ட அவர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். எளிமையான அணுகுமுறையால் மக்களின் நம்பிக்கையை பெற்றார்.
அவரது மறைவுக்கு ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, எதிர்க்கட்சி தலைவர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அனுபவமிக்க தலைவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என அவர்கள் கூறியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!