undefined

மூத்த தயாரிப்பாளர் எம்.எம். பெய்க்  காலமானார்... வீட்டில் அவரது  உடல் சடலமாக மீட்பு!  

 

 

மூத்த திரைப்பட தயாரிப்பாளர் எம்.எம். பேக் (70) தனது வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். பல நாட்களாக வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். துர்நாற்றம் வீசியதால் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அவரது உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பினர். நீண்டநாள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக அவரது விளம்பரதாரர் ஹனிஃப் ஜவேரி தெரிவித்தார்.

திரைத்துறையில் அவர் தனது பயணத்தை ஜே ஓம் பிரகாஷ், விமல் குமார், ராகேஷ் ரோஷன் ஆகியோரிடம் உதவியாளராக தொடங்கினார். ஆத்மி கிலோனா ஹை, ஜெய்சி கர்னி வைசி பர்னி, கர்ஸ் சுகானா ஹை, காலா பஜார், கிஷேன் கன்ஹையா போன்ற படங்களில் பணியாற்றினார். பின்னர் மாசம் கவா மற்றும் சோட்டி பாஹு ஆகிய படங்களை இயக்கினார்.

ஹிருத்திக் ரோஷன் தனது முதல் படமான கஹோ நா பியார் ஹை வெளியாவதற்கு முன்பே வசன உச்சரிப்பில் பேக் உதவி செய்ததாக கூறப்படுகிறது. அவரது மகள் ஷாஹிந்தா பெய்க், ‘பேபி குட்டு’ என அறியப்பட்டவர், ஆகிர் கியோன், நாகினா, பியார் கியா ஹை பியார் கரேங்கே, அவுலாத் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். அவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!