undefined

சென்னையில் பரபரப்பு... காரில் கடத்தி வந்த 187 கிலோ கஞ்சா!

 

ஆந்திராவில் இருந்து கார் மூலம் சென்னைக்கு 187 கிலோ கஞ்சாவைக் கடத்தி வந்த இரண்டு பேருக்குச் சென்னை போதைப்பொருள் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கும் தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த 23.10.2019 அன்று திருவள்ளூர் மாவட்டம் காரனோடை டோல்கேட் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து கார் ஒன்றில் கடத்தி வரப்பட்ட சுமார் 187 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராமசிவா (வயது 30) மற்றும் வந்தலா முரளி (வயது 36) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் முதலாவது கூடுதல் சிறப்பு நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகள் ராமசிவா மற்றும் வந்தலா முரளி ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து அதிரடியாகத் தீர்ப்பளித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!