undefined

மாமல்லபுரத்தில் பரபரப்பு... பரிந்துரை கடிதம் இல்லாததால் வெளியே நிறுத்தப்பட்ட சுவிட்சர்லாந்து ஹாக்கி வீரர்கள்!

 

சென்னையில் ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கிப் போட்டியில் பங்கேற்க வந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆக்கி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களைப் பார்வையிடச் சென்றபோது, பரிந்துரைக் கடிதம் இல்லாத காரணத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளியே நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கிப் போட்டியில் 24 சர்வதேச நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. இதற்காகச் சுவிட்சர்லாந்து ஆக்கி அணி வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். இந்த வீரர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களைப் பார்வையிடச் சென்றனர். ஆனால், அவர்களின் வருகை குறித்து விளையாட்டுத் துறை அதிகாரிகள் தொல்லியல் துறைக்கு பரிந்துரைக் கடிதம் வழங்காததால் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சுவிட்சர்லாந்து வீரர்கள் நுழைவாயிலுக்கு வெளியே காத்திருக்க நேர்ந்தது.

பின்னர், வீரர்களுடன் வந்திருந்த பயிற்சியாளர், சக வெளிநாட்டுப் பயணிகள் நுழைவுச் சீட்டு வாங்குவது போலவே கட்டணம் செலுத்த முடிவு செய்தார். மொத்தம் 26 பேருக்காகத் தலா ரூ.600 வீதம் மொத்தம் ரூ.15,600 கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற்றார். அதன் பின்னரே வீரர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுச் சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டுச் சென்றனர். பரிந்துரைக் கடிதம் இல்லாததாலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!