பரபரப்பு வீடியோ... பட்டப்பகலில் குறுகிய சாலையில் பிரபல ரவுடி மீது திடீர் துப்பாக்கி சூடு…. !
பஞ்சாப் மாநிலத்தில் அம்ருத்சர் நகரத்தில் கத்தியான் வாலா பஜார் பகுதியில் வசித்து வருபவர் பிரபல ரவுடியான ரவ்னித் சிங். நேற்று இவர் தனது நண்பருடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது இருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இதில் படுகாயமடைந்து ரவ்னித் தரையில் விழுந்துவிட்டார். இது குறித்த CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
அம்ருத்சர் ADCP விஷால்ஜித் சிங் இது குறித்து “இருவர் ரவ்னித் சிங்கை சுட்டனர். சம்பவ இடத்துக்கு நாங்கள் விரைந்து வந்தோம். விசாரணை நடைபெற்று வருகிறது. சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,” எனக் கூறியுள்ளார். ரவ்னித் சிங்கை முன்விரோதம் காரணமாக தாக்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!