சென்யார் புயல் உருவானது... தமிழகத்திற்கு பாதிப்பு?

 
 

அந்தமான் அருகே மலாக்கா ஜலந்தி பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு உருவாகி வங்கக் கடலில் புதிய வானிலை இயக்கம் உருவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 48 மணி நேரத்தில் தீவிர தாழ்வாகவும் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காற்றின் வேகம் 20–25 கி.மீ இருந்து 35 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அந்தமான்-நிகோபார் தீவுகளை நோக்கி செல்கிறது. நவம்பர் 26-ஆம் தேதி இது புயலாக மாறக்கூடும் என்றும், ஐ.அ.அ வழங்கிய பெயரான ‘சென்யார்’ என அழைக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. அந்தமான்–நிகோபார் தீவுகளில் நவம்பர் 25 முதல் 29 வரை கனமுதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுரை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிக பாதிப்பு இருக்காது என வானிலை மையம் தெரிவித்தாலும், நவம்பர் 25 முதல் 30 வரை மழை தீவிரமாக கூடும் நிலை உள்ளது. குறிப்பாக நவம்பர் 28–30 வரை மிகக் கனமழை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அலை உயரம் 2.5 மீட்டர் வரை இருக்கும் நிலையில், தாழ்வு புயலாக வலுப்பெற்றால் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்ட தகவல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!