undefined

அதிகாலையில் அதிர்ச்சி...   சன் டிவி சீரியல்  நடிகை கார் மோதி ஓட்டுநர் பலி! 

 

 

சென்னையிலிருந்து தேனி நோக்கி பயணம் செய்த சன் டிவி தொடரில் நடித்து வரும் நடிகை தேவிப்பிரியாவின் கார், பெரம்பலூர் அடுத்த பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே பஞ்சராகி நின்றது. நள்ளிரவு 12.30 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் ஏற்பட்டது. டயர் மாற்றிக் கொண்டிருந்த போது பின் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் முத்து கணேஷ் (38) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடிகையின் உதவியாளர் திவாகர் (36) முகத்தில் காயமடைந்தார். தகவல் கிடைத்ததும் பாடாலூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

காயமடைந்த திவாகர் முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த நடிகையின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!